மிசௌரி ஆளுநர் மாளிகையில் பறை,சிலம்பம்
மிசௌரி ஆளுநர் மாளிகையில் பறை,சிலம்பம்: Parai percussion dance and Silambam Martial Arts performed in the event hosted by Missouri Governor Mike Parson in Jefferson City. Happy to be part of making History, showcasing our multiple cultures and ART forms in Missouri Governor’s Mansion. Thanks to American Cricket Academy organizers for inviting to this event. அமெரிக்க மண்ணில், 2007 ல் மிசௌரியில் தொடங்கியது பறையின் பயணம்.இன்று பல்வேறு குழுக்களும் மிகச்சிறப்பாக பயின்று, முன்னெடுத்து வருகின்றனர். அதில் நேற்று ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. ஜெஃபர்சன் சிட்டி யிலுள்ள மிசௌரி மாநில ஆளுனர் மாளிகையில், அமைதியையும்,ஒற்றுமையையும் வலியுறுத்தி நடந்த தீபாவளி விழாவில் பறையும், சிலம்பமும் அரங்கேறியது. மிசௌரி நதிக்கரையில் அமைந்துள்ள 150 வருட வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய மாளிகையில் ஆளுநர் அளித்த விருந்துடன் சிறப்பாக நடந்தது. மாண்புமிகு ஆளுநர். மைக் பார்சனும், அவர் மனைவி திருமதி.தெரசா பார்சனும் சிலம்பம், பறையைப் பார்த்து மகிழ்ந்து,, வெகுவாகப் பாராட்டினர். ட்விட்டரிலும்,முகநூலிலும் புகைப்படங்களைப் பகிர்ந்து, சிலம்பம் நிகழ்த்திய சிறுவன் கோகுல் பாலாவிடமும், பறைக் குழுவினரிடமும் தங்கள் தனிப்பட்ட பாராட்டுக்களைத் தெரிவித்தனர். பறை நடன வடிவமைப்பாளர் பாலா,திவ்யா, நண்பர்கள் ரமேஷ்,உமாசங்கர், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACA கிரிக்கெட் கழக பொறுப்பாளர்களுக்கும், மனமார்ந்த நன்றி. கூடியிருந்த அரசு நிர்வாகிகள், இந்திய நண்பர்கள், அனைவரும் உற்சாகமடைந்து, இதைப் பாராட்டவும்,பழக விருப்பம் தெரிவித்தனர். பறை ஒரு உயிர்ப்புள்ள இசை. அதன் பயணத்தை அதுவே தீர்மானிக்கிறது. நாம் பறையிசையின் கருவிகள் மட்டுமே!! -இரா.பொற்செழியன்.